சென்னையில் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின், சீமான்

“இந்த தேர்தலில் திமுக, இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்பது தமிழ்நாட்டு மக்களின் மனநிலையாக உள்ளது” .
சென்னையில் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின், சீமான்
சென்னையில் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின், சீமான் @ANI

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தேர்தலில் திமுக, இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்பது தமிழ்நாட்டு மக்களின் மனநிலையாக உள்ளது” என்றார்.

மேலும், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். மக்களிடமும் அந்த சிந்தனை இருப்பதை எங்களால் பார்க்க முடிகிறது. கண்டிப்பாக ஒரு மாற்றம் இருக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in