தவறு எப்படி நடந்தது?: மனவேதனையில் நடிகர் சூரி

“நான் அடுத்த தேர்தலில் வாக்களிப்பேன் என நம்புகிறேன்”.
நடிகர் சூரி
நடிகர் சூரி@sooriofficial

வாக்காளர்கள் பட்டியலில் தன்னுடைய பெயர் விடுபட்டு போனதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் தன்னுடைய பெயர் விடுபட்டு போனதாக சூரி தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“என் ஜனநாயக கடமையை செலுத்த வந்தேன். கடந்த தேர்தல்களில் எனது கடமையை சரியாக செய்துள்ளேன். ஆனால், இம்முறை வாக்காளர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் விடுபட்டு போனதாகச் சொல்கிறார்கள். எனது மனைவி பெயர் உள்ளது. வாக்களிக்க வந்து அது நடக்கவில்லை என்பதால் மனவேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்தது என தெரியவில்லை. தவறாமல் அனைவரும் உங்களின் வாக்குகளை செலுத்துங்கள். நான் அடுத்த தேர்தலில் வாக்களிப்பேன் என நம்புகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in