தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்: சத்யபிரதா சாஹூ தகவல்

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கும்.
சத்யபிரதா சாஹூ
சத்யபிரதா சாஹூ

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணியில் 38,500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து சத்யபிரதா சாஹூ கூறியதாவது:

“தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் நடைபெறவுள்ளது. அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கை பணியில் 38,500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான முதல் கட்ட பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டு, ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கும். வாக்கு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மேஜையிலும் எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும். மேலும், அங்கு சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் காணொளியாகப் பதிவு செய்யப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in