பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால்..: எஸ்.பி. வேலுமணி ஆதங்கம்

“அண்ணாமலையால் தான் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது”.
எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியுள்ளார்.

கடந்த ஜூன் 4 அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தமிழ்நாட்டின் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. இத்தேர்தலில் அதிமுக கூட்டணி 29 தொகுதிகளில் 2-வது இடத்தையும் 8 தொகுதிகளில் 3-வது இடத்தையும் 3 தொகுதிகளில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “அண்ணாமலையால் தான் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது” என பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“அதிமுக பல்வேறு வெற்றி வாய்ப்புகளை இழந்திருந்தாலும் அதையெல்லாம் படிக்கட்டாக வைத்து 1991, 2001, 2011, 2016 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றிகளை கண்ட இயக்கம். அண்ணாமலை கொஞ்சம் அதிகமாகவே பேசினார். அவர் அரசியலுக்கு வந்தே கொஞ்சம் நாள் தான் ஆகிறது. அண்ணாமலையால் தான் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. கூட்டணி கட்சியில் இருந்துக்கொண்டே கூட்டணி தலைவர்களைப் பற்றி அவர் விமர்சிக்கிறார். பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம் என்பது அனைவருக்கும் தெரியும். எந்த முடிவை எடுத்தாலும் அதிமுக சரியாக எடுக்கும். 2019-ல் பெற்ற வாக்குகளுடன் இந்த முறை அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in