வரும் நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் வாக்காளர் திருத்தச் சிறப்பு முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுமைக்குமான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அக்.29) மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களால் வெளியிடப்பட்டது. வரும் நவம்பர் மாதத்தில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் வகையில், இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி நவம்பர் 16, 17, 23, 24 ஆகிய நான்கு நாட்களில், வாக்காளர் திருத்தச் சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர விரும்புவோர் நவம்பர் 28 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தகவல்.
அத்துடன் தமிழ்நாட்டில் மொத்தம் 6,27,30,588 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார். இதன்படி தமிழகத்தில் 3,19,30,839 கோடி பெண் வாக்காளர்களும், 3,07,90,791 கோடி ஆண் வாக்காளர்களும், 8964 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக உள்ளது சோழிங்கநல்லூர். இந்தத் தொகுதியில் மொத்தம் 6,76,133 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. கீழ்வேளூரில் சுமார் 1,73,230 வாக்காளர்கள் உள்ளனர்.