தமிழ்நாடு, புதுவையில் தேர்தல் பிரசாரம் நிறைவு

தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்பட 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாடு, புதுவையில் தேர்தல் பிரசாரம் நிறைவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 40 தொகுதிகள் உள்பட நாடு முழுக்க 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் வாக்கு சேகரித்தார்கள்.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் பிரசாரம் மேற்கொண்டார்.

ஏப்ரல் 19 காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in