ஏப்ரல் 11-ல் ரமலான் பண்டிகை!

ஏப்ரல் 9 மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஏப்ரல் 11-ல் ரமலான் பண்டிகை!
ANI
1 min read

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11-ல் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என மாநில அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கடந்த மார்ச் 12 முதல் நோன்பைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

நோன்பு காலம் முடிவடைந்த நிலையில், பிறை எதுவும் இன்று (ஏப்ரல் 9) தெரியவில்லை. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11-ல் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 9 மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் காணப்படவில்லை என்பதால், ஏப்ரல் 11 அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in