
நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டையின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, தினந்தோறும் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையை நிர்ணயித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, முட்டையின் 5 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கோழிப்பண்ணை வரலாற்றிலேயே அதிகபட்ச விலையாக இது அமைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் முட்டையின் விலை 25 காசுகள் உயர்ந்துள்ளது.
மேலும், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு போன்ற பண்டிகைகள் நெருங்கும் நேரம் என்பதால் கேக் தயாரிக்க அதிகளவு முட்டை தேவைப்படும் என்பதால் முட்டையின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.