
வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவித்துள்ளது தொடக்கக் கல்வி இயக்குநரகம்.
அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ல் ஆண்டு இறுதித் தேர்வு நிறைவடையும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து தமிழக தொடக்கக் கல்வி இயக்குநரகம் இன்று (மார்ச் 30) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு/ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படியும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழிகாட்டுதலின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. வருகின்ற ஏப்ரல் 7 முதல் 17 வரை தேர்வுகள் நடைபெறும்.
திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணையின்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஏப்ரல் 7-ல் தமிழ் தேர்வும், ஏப்ரல் 8-ல் விருப்ப மொழித் தேர்வும், ஏப்ரல் 9-ல் ஆங்கிலத் தேர்வும், ஏப்ரல் 11-ல் கணக்கு தேர்வும் நடைபெறவுள்ளன.
4 முதல் 5-ம் வகுப்பு வரை ஏப்ரல் 15-ல் அறிவியல் தேர்வும், ஏப்ரல் 17-ல் சமூக அறிவியல் தேர்வும் நடைபெறவுள்ளன’.