ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ்
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ்ANI

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30 வரை இ பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக கோடைக் காலங்களில் சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இதுபோன்ற மலைப் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

இந்நிலையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 முதல் ஜூன் 30 வரை இ பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும், இ பாஸ் நடைமுறையில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் விலக்களிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in