திருச்சி: மதிமுக வேட்பாளராக துரை வைகோ அறிவிப்பு

"மீண்டும் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டால் மகிழ்ச்சி."
வைகோ (கோப்புப்படம்)
வைகோ (கோப்புப்படம்)ANI

திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளராகக் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படுவதாக மார்ச் 8-ல் முடிவு செய்யப்பட்டது. எனினும், எந்தத் தொகுதி என்பது பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதிமுகவுக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படுவதாக திமுக இன்று அறிவித்தது. இதுதொடர்புடைய ஒப்பந்தத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டார்கள்.

திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளரை முடிவு செய்வதற்காக மதிமுக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் கூடியது. திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ வேட்பாளராகப் போட்டியிடுவார் என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் தனிச் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடுகிறது. மீண்டும் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டால் மகிழ்ச்சி என்று கூறிய வைகோ, இல்லையெனில் வேறு சின்னத்தில் போட்டியிடு அதை மக்களிடத்தில் கொண்டு செல்வோம் என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in