தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்தன
தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக புறக்கணிப்பு
PRINT-93
1 min read

சுதந்திர தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கவிருக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது திமுக.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு வருடமும் சென்னை ஆளுநர் மாளிகையில், பிரதான கட்சிகளுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தமிழக ஆளுநர் வழக்கமாக தேநீர் விருந்து வழங்குவார். இந்நிலையில் நாளை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக நேற்று காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்தன.

`பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டையாக உள்ளார். பதவிக்காலம் முடிந்தும் ஆர்.என். ரவி தமிழக ஆளுநராகத் தொடர்வது இந்திய அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று பேட்டியளித்திருந்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை.

கூட்டணிக்கட்சிகளின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக `மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதால் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது’ என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்துள்ளார். மேலும் ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை முடிவு செய்வார் எனவும் ஆர்.எஸ். பாரதி தகவலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in