தேர்தல் நிதி பத்திரங்கள்: எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து திமுக, அதிமுக நிதி பெற்றுள்ளன?

திமுகவுக்கு இந்தியா சிமெண்ட்ஸ் ரூ. 14 கோடியையும், அதிமுகவுக்கு சிஎஸ்கே ரூ. 5 கோடியையும் நிதியாக அளித்துள்ளன.
தேர்தல் நிதி பத்திரங்கள்: எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து திமுக, அதிமுக நிதி பெற்றுள்ளன?

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் திமுக ரூ. 656.5 கோடியையும், அதிமுக ரூ. 6.05 கோடியையும் நிதியாகப் பெற்றுள்ளன.

தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன. இந்தத் தரவுகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்தத் தரவுகளை உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் திருப்பி அளித்ததுடன், அதை டிஜிட்டல் வடிவிலும் அளித்துள்ளது. இந்தத் தரவுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

திமுக எந்தெந்த நிறுவனத்திடமிருந்து எவ்வளவு நிதி பெற்றுள்ளது:

2019-20:

  • இந்தியா சிமெண்ட்ஸ் - ரூ. 10 கோடி

  • லக்‌ஷ்மி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் - ரூ. 1.5 கோடி

  • ராம்கோ சிமெண்ட்ஸ் - ரூ. 5 கோடி

  • மெகா இன்ஃப்ரா ஸ்ட்ரக்ட்சர் - ரூ. 20 கோடி

  • அப்போலோ - ரூ. 1 கோடி

  • திரிவேணி - ரூ. 5 கோடி

  • பிர்லா ரூ. 1 கோடி

  • ஐஆர்பி - ரூ. 2 கோடி

2020-21:

  • ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவெட் லிமிடெட் - ரூ. 60 கோடி

  • மெகா இன்ஃப்ரா ஸ்ட்ரக்ட்சர் - ரூ. 20 கோடி

2021-22:

  • ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவெட் லிமிடெட் - ரூ. 249 கோடி

  • மெகா இன்ஃப்ரா ஸ்ட்ரக்ட்சர் - ரூ. 40 கோடி

  • சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் - ரூ. 10 கோடி

  • இந்தியா சிமெண்ட்ஸ் - ரூ. 4 கோடி

  • திரிவேணி - ரூ. 3 கோடி

2022-23:

  • ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவெட் லிமிடெட் - ரூ. 160 கோடி

  • மெகா இன்ஃப்ரா ஸ்ட்ரக்ட்சர் - ரூ. 25 கோடி

  • ஏப்ரல் 1, 2023 முதல் தரவுகளைத் தாக்கல் செய்யும் வரை:

  • ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவெட் லிமிடெட் - ரூ. 40 கோடி

அதிமுக பெற்ற நிதி விவரம்:

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அதிமுக மொத்தம் ரூ. 6.05 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. இதில் கோவையைச் சேர்ந்த லக்‌ஷ்மி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏப்ரல் 12, 2019-ல் ரூ. 1 கோடியை நிதியாக அளித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் ஏப்ரல் 12, 2019-ல் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ரூ. 5 கோடியை நிதியாக அளித்துள்ளது. மேலும் சென்னையைச் சேர்ந்த கோபால் ஸ்ரீனிவாசன் என்பவர் ஏப்ரல் 15, 2019-ல் ரூ. 5 லட்சத்தை நிதியாக அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in