பணிப் பெண் சித்ரவதை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது

இவர்களைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பணிகளை தனிப்படையினர் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணிப் பெண் சித்ரவதை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் கைது
படம்: இன்ஸ்டாகிராம்
1 min read

பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட புகாரில் தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏ-வின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா ஆகியோர் இன்புட்: ஆந்திரப்பிரதேசத்தில்தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

உளுந்தூர்பேட்டையிலிருந்து வீட்டு வேலைக்கு அழைத்து வரப்பட்ட பணிப் பெண்ணைக் கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தததாக, பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரைத் தொடர்ந்து, தனக்கும் தனது மகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என திமுக எம்எல்ஏ கருணாநிதி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இருவரும் தலைமறைவாகினார்கள். இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆந்திரத்தில் தலைமறைவாகியிருந்த இருவரையும் தனிப்படையினர் கைது செய்துள்ளார்கள். இவர்களைத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பணிகளை தனிப்படையினர் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பிப்ரவரி 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in