கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு | DMK
திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருது கனிமொழி எம்.பி.-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் 17 அன்று கரூரில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தொடக்க விழா ஆகியவற்றை இணைத்து ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படும். கடந்தாண்டு முப்பெரும் விழாவுடன் பவள விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டது.
முப்பெரும் விழாவில் திமுக சார்பில் ஆண்டுதோறும் பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் விருதுகள் வழங்கப்படும். நடப்பாண்டில் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்கள் பட்டியலை திமுக அறிவித்துள்ளது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்பெரும் விழா விருதுப் பட்டியல்
பெரியார் விருது - கனிமொழி கருணாநிதி (துணைப் பொதுச்செயலாளர் - எம்.பி.)
அண்ணா விருது- சுப. சீத்தாராமன் (தணிக்கைக் குழு முன்னாள் உறுப்பினர் - பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர்)
கலைஞர் விருது - சோ.மா. இராமச்சந்திரன் (அண்ணா நகர் பகுதி முன்னாள் செயலாளர் - முன்னாள் எம்எல்ஏ)
பாவேந்தர் விருது - குளித்தலை சிவராமன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர் - குளித்தலை ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர்)
பேராசிரியர் விருது - மருதுர் இராமலிங்கம் (திமுக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர் - முன்னாள் எம்எல்ஏ- முன்னாள் கொறடா)
மு.க. ஸ்டாலின் விருது - பொங்கலூர் நா. பழனிச்சாமி (ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் - முன்னாள் அமைச்சர்)
DMK | Kanimozhi | Periyar Award | Anna Award | DMK Award | MK Stalin Award | Kalaignar Award