விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ல் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நாடு முழுக்க காலியாக உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று இடைத்தேர்தல் அறிவித்தது. இதில் விக்கிரவாண்டியும் அடக்கம்.

விக்கிரவாண்டிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூலை 13-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அன்னியூர் சிவா விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக உள்ளார்.

மறைந்த திமுக எம்எல்ஏ புகழேந்தி விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இவர் மறைவடைந்ததையடுத்து, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக தெ. கௌதம் சிகாமணி நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று காலை அறிவித்தார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்த அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் இந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், இவருக்குப் பதில் ப. சேகர் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறார் என்றும் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டார்.

நாம் தமிழர் தனித்துப் போட்டி:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் தனித்துப் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றபிறகு, நாம் தமிழர் எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in