தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு

பதவிக்காலம் முடிந்தும் ஆர்.என். ரவி தமிழக ஆளுநராகத் தொடர்வது இந்திய அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது
தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பு
PRINT-118
1 min read

ஆகஸ்ட் 15-ல் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக திமுகவின் கூட்டணிக்கட்சிகள் அறிவித்துள்ளன.

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று சென்னை ஆளுநர் மாளிகையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து வழங்கும் நிகழ்வு வழக்கமாக நடைபெறும். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15-ல் நடைபெறவிருக்கும் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

`தமிழக ஆளுநர் எங்களை தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார். அவரது அழைப்புக்கு நன்றி. கடந்த 70 வருடங்கள் இல்லாத அளவுக்கு நரேந்திர மோடி பிரதமராக இருக்கும்போது ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் ரீதியாக உள்ளன. தமிழ் நாட்டின் நலனுக்கும், அரசுக்கும் எதிராக தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கின்றன.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார். பதவிக்காலம் முடிந்தும் ஆர்.என். ரவி தமிழக ஆளுநராகத் தொடர்வது இந்திய அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று பேட்டி அளித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை.

`மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. இதைக் கண்டித்து ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கின்றோம்’ என்று சிபிஎம் அறிவித்துள்ளது.

2021-ல் தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, செப்டம்பரில் தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். இதை அடுத்து 2022-ல் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை திமுகவும், அதன் கூட்டணிக்கட்சிகளும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in