தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சென்னை சென்ட்ரல் - கோவை, கோவை - சென்னை சென்ட்ரல், மங்களூரு - சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர் - மங்களூரு ஆகிய நகரங்கள் இடையே...
தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
1 min read

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 31 அன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான வெள்ளிக் கிழமை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனவே, மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள்.

இந்நிலையில் மக்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதேபோல் தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - கோவை, கோவை -சென்னை சென்ட்ரல், மங்களூரு - சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர் - மங்களூரு ஆகிய நகரங்கள் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அக்.29 & நவ.2 ஆகிய தேதிகளில் மாலை 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.15 மணிக்கு போத்தனூர் (கோவை) சென்றடையும் என்றும் அக்.31 & நவ.4 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு சிறப்பு ரயில், அக்.29 அன்று மாலை 7.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும் என்றும் அக்.30 அன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு காலை 5.15 மணிக்கு மங்களூரு சென்ட்ரலுக்கு சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in