அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் கொண்ட மாவட்டங்கள் என்னென்ன?

14 மாவட்டங்களில் அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் இல்லை.
அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் கொண்ட மாவட்டங்கள் என்னென்ன?
1 min read

தமிழக அமைச்சரவை புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதன் மூலம் அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் கொண்ட மாவட்டங்களும் மாறியுள்ளன.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 5-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து சிறையிலிருந்து வெளியே வந்தார். இவர் அமைச்சராகத் தொடர உச்ச நீதிமன்றத்தால் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எனவே, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் மீண்டும் இணைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

அமைச்சரவை மாற்றம் மூலம் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். செந்தில் பாலாஜி, கோவி. செழியன் (புதுமுகம்), ஆர். ராஜேந்திரன் (புதுமுகம்), ஆவடி நாசர் ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்கள்.

பால்வளத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான், சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த கே. ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இந்த அமைச்சரவை மாற்றம் மூலம் மாவட்டங்கள் வாரியாக அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் மாறியுள்ளது.

அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் கொண்ட மாவட்டங்கள்

  • சென்னை - மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு

  • திருச்சி - கே.என். நேரு, அன்பில் மகேஷ்

  • கடலூர் - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வி. கணேசன்

  • திருப்பூர் - மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ்

  • திண்டுக்கல் - ஐ. பெரியசாமி, சக்கரபாணி

  • மதுரை - பழனிவேல் தியாகராஜன், பி. மூர்த்தி

  • தூத்துக்குடி - கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்

  • புதுக்கோட்டை - ரகுபதி, மெய்யநாதன்

  • விருதுநகர் - தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

  • தஞ்சாவூர் - கோவி. செழியன்

  • சேலம் - ராஜேந்திரன்

  • கரூர் - செந்தில் பாலாஜி

  • திருவள்ளூர் - சா.மு. நாசர்

  • வேலூர் - துரைமுருகன்

  • திருவண்ணாமலை - எ.வ. வேலு

  • ஈரோடு - முத்துசாமி

  • சிவகங்கை - பெரியகருப்பன்

  • ராமநாதபுரம் - ராஜகண்ணப்பன்

  • திருவாரூர் - டிஆர்பி ராஜா

  • நாமக்கல் - மதிவேந்தன்

  • பெரம்பலூர் - சிவசங்கர்

  • ராணிப்பேட்டை - ஆர். காந்தி

  • தா.மோ. அன்பரசன் - காஞ்சிபுரம்

  • கள்ளக்குறிச்சி - பொன்முடி

அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்கள்

கோவை, நெல்லை, தருமபுரி, அரியலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, நீலகிரி, செங்கல்பட்டு, தேனி, தென்காசி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in