கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

ரஜினிக்கு ஆளுநர் வாய்ப்பு வந்ததா?: சகோதரர் சத்யநாராயணா பேட்டி | Rajinikanth

அரசியலில் விஜய்-க்கு கடினம் என்ற சத்யநாராயணா அண்ணாமலை வருவார் என்றும் கூறியிருக்கிறார்.
Published on

நடிகர் ரஜினிகாந்துக்கு ஆளுநர் பதவிக்கான வாய்ப்பு வந்ததாக அவருடைய சகோதரர் சத்யநாராயணா பேட்டியளித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் சார்பாக அக்கட்சித் தலைவர் கமல் ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இவர் ஜூலை 25 அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார். இதை முன்னிட்டு, ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல் ஹாசன்.

இதனிடையே, ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

செய்தியாளர்கள் கேள்வி

கமல்ஹாசனை எம்.பி.யாகத் தேர்வு செய்துள்ளார்கள். ரஜினிகாந்த் எம்.பி.யாக வாய்ப்பு உள்ளதா?

ரஜினி சகோதரர் சத்யநாராயணா பதில்

இவருக்கு எதற்கு? அதெல்லாம் வேண்டாம். ஆளுநரே வந்தாரு, ஆளுநரே... வாய்ப்பு வந்தது. அவருக்கு இஷ்டம் இல்லை.

கேள்வி: அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்தாரா?

சத்யநாராயணா பதில்: இல்லை.

கேள்வி: விஜயின் அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சத்யநாராயணா பதில்: சிறப்பாகச் செய்ய வேண்டும். இவர் வருவது ரொம்ப கஷ்டம். பார்க்கலாம். அண்ணாமலை வருவார்.

கேள்வி: அண்ணாமலை என்னவாக வருவார்?

சத்யநாராயணா பதில்: அவர்களுடைய ஆட்சி உள்ளது. அவர் வருவார்.

கேள்வி: அண்ணாமலை தலைமையில் பாஜக ஆட்சி அமையுமா?

சத்யநாராயணா பதில்: கண்டிப்பாக அமையும்.

கேள்வி: அண்ணாமலை முதல்வராக வாய்ப்பு உள்ளதா?

சத்யநாராயணா பதில்: தெரியாது, மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Rajinikanth | Sathyanarayana | Governor | Kamal Haasan | Makkal Needhi Maiam | Rajya Sabha MP | Rajini Kamal | Vijay | TVK Vijay | Annamalai

logo
Kizhakku News
kizhakkunews.in