கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
Published on

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரு சில மாவட்டங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மருந்துகள் இருப்பு, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in