

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நவம்பர் 29 அன்று 6 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அடுத்த நான்கு நாள்களுக்கான மழை குறித்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவம்பர் 27
கனமழை:
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.
நவம்பர் 28:
அதிகனமழை:
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை.
மிகக் கனமழை:
மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால்.
கனமழை:
தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர், புதுச்சேரி.
நவம்பர் 29:
அதிகனமழை:
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால்.
மிகக் கனமழை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்.
கனமழை:
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை.
நவம்பர் 30:
கனமழை:
வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி.
மிகக் கனமழை:
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு.
Red Alert | Rain Alert | TN Rains | Tamil Nadu Rain | Bay of Bengal | Cyclone Alert | IMD Chennai | RMC Chennai |