தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் தேவை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அறிவிப்பு

மும்மொழிக் கொள்கை சர்ச்சையைத் தொடர்ந்து, தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் தேவை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அறிவிப்பு
1 min read

தற்காலிக தமிழ் ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வுக்காக காரைக்குடி மற்றும் இலுப்பைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

2020 தேசிய கல்விக்கொள்கை மற்றும் முன்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் விவகாரத்தை முன்வைத்து, மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக முன்மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்தன.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் உள்ளதாகவும், தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சர்ச்சையானது. இது தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத பட்டியல் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் இலுப்பைக்குடியில் உள்ள 2 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் தமிழ் ஆசிரியர்கள் தேவை என இன்று (மார்ச் 2) வெளியான செய்தித்தாள்களில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

2025-26 கல்வியாண்டுக்கான தற்காலிக தமிழாசியர் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வு, இலுப்பைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வரும் மார்ச் 15-ல் நடைபெறும் என்றும், காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வரும் மார்ச் 16-ல் நடைபெறும் என்றும் செய்தித்தாள்களில் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளை முன்வைத்து மீண்டும் சமூக வலைதளங்களில் மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்கள் தொடங்கியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in