மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா!

வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், மயிலாடுதுறைக்கான வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா!
படம்: https://twitter.com/INCTamilNadu

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மொத்தம் 9 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், 7 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முதலில் அறிவித்தது. திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறைக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தார்கள்.

இன்று மாலைக்குள் மீதமுள்ள இரு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தெரிவித்தார். இதன் அடிப்படையில் 6-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இதில், திருநெல்வேலிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் திருநெல்வேலியில் போட்டியிடுகிறார்.

விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டபோதிலும், மயிலாடுதுறைக்கு வேட்பாளர் நேற்று அறிவிக்கப்படாமல் இருந்தார். நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது.

இந்த நிலையில், மயிலாடுதுறைக்கான வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in