சவுக்கு சங்கர் கைது!

தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் போது, சவுக்கு சங்கர் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது.
சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் @SavukkuOfficial

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் யூடியூபரான 'சவுக்கு' சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அரசியல் கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருபவர் சவுக்கு சங்கர். இவர் சவுக்கு மீடியா என்கிற இணைய ஊடகத்தையும் நடத்தி வருகிறார். இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்களைத் தரக்குறைவாகப் பேசியது தொடர்பாக, கோவை மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் பிணையில் வெளிவர முடியாதபடி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து, தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் இன்று கைது செய்தார்கள்.

தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் போது, சவுக்கு சங்கர் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் அவர் உள்பட 3 பேர் காயமடைந்தார்கள். தாராபுரத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in