
பறக்கும் ரயில் சேவை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் கூறியுள்ளார்.
உபெர் செயலி மூலம் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெறும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுகச் சலுகையாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் உபெர் செயலியைப் பயன்படுத்தி மெட்ரோ டிக்கெட்டை பெற்றால் 50% தள்ளுபடியைப் பெறலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை உபெர் செயலியில் மட்டுமே கிடைக்கும்.
இதுதொடர்புடைய செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார்.
"பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதில் முதலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத இறுதியில் அது கையெழுத்தாகும். மெட்ரோ ரயில்களை அறிமுகம் செய்யும் வரை பறக்கும் ரயில் சேவை வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும். அதன்பிறகு, அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. பூந்தமல்லி - போரூர் வழித்தடம் வரும் டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும். டிசம்பரிலிருந்து ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒவ்வொரு வழித்தடமாகப் பயன்பாட்டுக்கு வரும்." என்றார் அவர்.
CMRL | Kilambakkam | Chennai Rail Metro Limited | Chennai Metro | CMRL | MRTS