தமிழக அரசுக்கு எதிரான அறிக்கை: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர் ஸ்டாலின் | Independence Day

விசிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
தமிழக அரசுக்கு எதிரான அறிக்கை: ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர் ஸ்டாலின் | Independence Day
ANI
1 min read

தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டதைத் தொடர்ந்து, நாளை (ஆக. 15) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புறக்கணிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (ஆக. 15) சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா உரையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றுகிறார். இதை ஒட்டி புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் ஐந்தடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக, ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்போருக்கு எதிரான கல்வி மற்றும் சமூகப் பாகுபாடு, அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள் அதிகரிப்பு, இளைஞர்களிடம் வேகமாகப் பரவும் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பிற பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு ஆகிய சவால்களை தமிழக மக்கள் எதிர்கொள்வதாக ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுவரை இல்லாத வகையில் அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை ஆளுநர் முன்வைத்துள்ளதால், நாளை (ஆக. 15) ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கவுள்ளதாக அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார் என புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இருக்கும் விசிக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in