தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை!

இன்று கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை!
ANI

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சென்னை கோபாலபுர இல்லத்தில் இருந்த திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்பு தமிழக அமைச்சர்கள் சகிதமாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்ட முதல்வர், ‘கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்’ என்ற சிறப்பு புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து அதனைப் பார்வையிட்டார்.

டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சோனியா காந்தி, கருணாநிதியின் திருஉருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

1924 ஆம் வருடம் திருவாரூரில் பிறந்த கலைஞர் கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்துள்ளார். வயது மூப்பின் காரணமாக 2018 ஆம் வருடம் 94 வயதில் அவர் சென்னையில் காலமானார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in