அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

2019 டிசம்பரில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, ரூ. 1,916 கோடி மதிப்பில் 4 வருடங்களுக்கும் மேலாக திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
1 min read

3 மாவட்ட விவசாயிகளின் 65 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைக் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் விவசாயத்துக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

பவானி ஆற்றில் இருந்து வெளியாகும் உபரி நீரை பயன்படுத்தி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்த 1963-ல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓவ்வொரு சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் தவறாமல் இடம்பெற்று வந்தது அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.

கடந்த 2019 டிசம்பரில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டன. மொத்தம் ரூ. 1,916 கோடி மதிப்பில் 4 வருடங்களுக்கும் மேலாக இத்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் திட்டப்பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்று இன்று முதல்வர் ஸ்டாலினால் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் 2,000 கன அடி உபரி நீர், 3 மாவட்டங்களைச் சேர்ந்த 1,045 குளம் குட்டைகளில் தேக்கி வைக்கப்படவுள்ளது. அதற்காக 945 கி.மீ. தூரத்துக்கு பிரதான குழாய்களும், கிளை குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் பராமரிப்புப் பணியை அடுத்து ஐந்தாண்டுகளுக்கு `எல் அண்ட் டி’ நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in