தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம்

புதிய முதலீடுகளால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடக்கம்
1 min read

சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ள புதிய தொழிற்சாலைகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

பல்வேறு பன்னாட்டு, உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளும் இந்த புதிய முதலீடுகளால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய சில திட்டங்கள் பின்வருமாறு:

ரூ. 128 கோடி மதிப்பீட்டில் OMRON ஹெல்த்கேர் உற்பத்தி நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய உற்பத்தி மையத்தை அமைக்கிறது. ரூ. 312 கோடி மதிப்பீட்டில் Hi-P நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய உற்பத்தி மையத்தை அமைக்கிறது. ரூ. 2,600 கோடி மதிப்பீட்டில் மதர்ஸன் எலெக்ட்ரானிக் காம்பொனென்ட்ஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய அசெம்பிளி மையத்தை அமைக்கிறது.

ரூ. 3500 கோடி மதிப்பீட்டில் எல் அண்ட் டி நிறுவனம் சென்னையில் எல் அண்ட் டி ஐடி பார்க்கை அமைக்கிறது. லூகாஸ் டிவிஎஸ் நிறுவனம் ரூ. 2850 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் எலெக்ட்ரானிக் பேட்டரி உற்பத்தி மையத்தை அமைக்கிறது. ஜூரோஜின் டெவலப்பர்ஸ் நிறுவனம் ரூ. 2000 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டையை அமைக்கிறது.

ரூ. 100 கோடி மதிப்பீட்டில் ஜி.பி. சல்ஃபோனேட்ஸ் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையை திருவள்ளூரில் அமைக்கிறது. ரெனால்ட் நிஸான் நிறுவனம் வாகன வடிவமைப்பு, ஆராய்ச்சி, ஐடி சேவை மையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கிறது. ரூ. 1141 கோடி மதிப்பீட்டில் சுந்தரம் ஃபாஸ்டெனர்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய உற்பத்தி மையங்களை அமைக்கிறது.

இந்த விழாவில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in