பெரியார், கலைஞருக்குக் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்குக் கிடைத்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்

"தகைசால் தமிழர் விருதுடன் ரூ. 10 லட்சம் கொடுத்தபோது அதனுடன் ரூ. 5 ஆயிரம் சேர்த்து பத்து லட்சத்துக்கு 5 ஆயிரம் ரூபாயை நிவாரண நிதியாக அளித்தவர்தான் நம்முடைய அய்யா நல்லகண்ணு அவர்கள்."
பெரியார், கலைஞருக்குக் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்குக் கிடைத்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்
3 min read

2022-ல் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கியது தான் எனக்குக் கிடைத்த பெருமை என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் நல்லகண்ணுவுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பித்தார். "தோழர் நல்லகண்ணு 100 - நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்" என்ற நூலையும் முதல்வர் வெளியிட்டார்.

"தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு, அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கினார் கலைஞர் அவர்கள். நான் 2022-ல் தகைசால் தமிழர் விருதை வழங்கினேன். இதுதான் எனக்குக் கிடைத்த பெருமை.

அண்ணல் அம்பேத்கர் விருதை பெறும்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 1 லட்சம் அய்யாவுக்குக் கொடுக்கப்பட்டது. அதில் ஐம்பதாயிரத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இன்னொரு ஐம்பதாயிரத்தை விவசாய சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார் தோழர் நல்லகண்ணு அவர்கள்!

இப்போது நம்முடைய ஆட்சி வந்த பிறகு என்னுடைய திருக்கரத்தால் தகைசால் தமிழர் விருது கொடுத்தபோது, அப்போது 10 லட்சம் ரூபாயை தந்தோம். அந்த 10 லட்ச ரூபாயை மட்டுமல்ல, அதனுடன் 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து, பத்து லட்சத்துக்கு 5 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாக அளித்தவர்தான் நம்முடைய அய்யா நல்லகண்ணு அவர்கள்.

1925-ம் ஆண்டு டிசம்பர் 20ம் நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது! அதே ஆண்டு அதே மாதத்தில் 26-ம் நாள் அய்யா நல்லகண்ணு பிறக்கிறார்.

அந்த வகையில் ஒரு இயக்கமும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அந்த இயக்கத்தின் மாபெரும் தலைவரும் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்.

நூற்றாண்டு கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் அகில இந்தியத் தலைவர்களுக்கும் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கும் அனைத்துத் தோழர்களுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதியவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மைவாதம், எதேச்சதிகாரம், மேலாதிக்கம் ஆகிய அனைத்துக்கும் எதிராக, ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவதுதான் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு நாம் வழங்கும் நூற்றாண்டு விழா பரிசாக அமைந்திட முடியும்!" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் முழு உரை:

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in