ஜூன் மாதத்திலேயேவா?: பூந்தமல்லியில் 11 செ.மீ மழை!

இன்று இரவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI
1 min read

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மற்றும் இன்று நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவரும் நிலையில், சென்னையில் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை கிண்டி, அஷோக் நகர், ஆலந்தூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், மைலாப்பூர், போரூர், குன்றத்தூர், தாம்பரம் உட்பட சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில் காற்று வீசி பலத்த மழை பெய்து பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக சென்னையில் நவம்பர் மாதத்தில் தான் அதிகளவில் மழை பெய்யும், ஆனால் எதிர்பாராத வகையில் தற்போது ஜூன் மாதத்திலேயே இவ்வளவு மழை பெய்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இன்று இரவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in