
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை பெரம்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதால், இந்தச் சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றது.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்தன.
இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ராத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் துறையின் பயிற்சிக் கல்லூரியின் இயக்குநராக சந்தீப் ராய் ராத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.