சென்னை ஐஐடி மாணவருக்கு ரூ. 4.3 கோடி ஊதியம்

இதே நிறுவனத்தில் இதற்கு முன்பு பயிற்சி மாணவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
சென்னை ஐஐடி மாணவருக்கு ரூ. 4.3 கோடி ஊதியம்
படம்: https://x.com/iitmadras
1 min read

சென்னை ஐஐடி மாணவருக்கு அமெரிக்க நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 4.3 கோடி ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஐஐடி தில்லி, மும்பை, ரூர்கி, கரக்பூர், குவாஹட்டி கல்வி நிறுவனங்களில் கல்லூரிக்கு வந்து வேலைக்கு ஆள் எடுக்கும் பிளேஸ்மென்ட் நடைமுறை தொடங்கியுள்ளது. இதன்படி, சென்னை ஐஐடியிலும் இது நடைபெற்று வருகிறது. இதன் பகுதியாக அமெரிக்க பங்குச் சந்தையில் உள்ள வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்டிரீட் நிறுவனம் சென்னை ஐஐடி மாணவரை ரூ. 4.3 கோடி ஊதியத்துக்கு வேலைக்கு எடுத்துள்ளது.

ரூ. 4.3 கோடியில் அடிப்படை ஊதியம், நிலையான போனஸ் மற்றும் இடம்பெயர்வதற்கான பலன்கள் உள்ளிட்டவை அடக்கம். இந்த மாணவர் சென்னை ஐஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர். இதே நிறுவனத்தில் இதற்கு முன்பு பயிற்சி மாணவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

பிளாக்ராக், கிளீன் மற்றும் டா வின்சி, ஏபிடி போர்ட்ஃபோலியோ மற்றும் ரூப்ரிக், டேடாபிரிக்ஸ், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களும் ஐஐடி கல்லூரிகளில் பெரிய தொகைக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in