

திருத்தணியில் ஒடிஷாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் மீது 17 வயது சிறுவர்கள் கத்தியைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 4 சிறுவர்களை திருத்தணி நகர காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.
காவல் துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஒடிஷா இளைஞர் மற்றும் சிறுவர்கள் இடையே போதையில் நிகழ்ந்த வாக்குவாதம், தாக்குதல் சம்பவத்தில் முடிந்துள்ளது தெரியவந்திருக்கிறது.
ஒடிஷாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சுராஜ். இவர் அண்மையில் தான் சென்னைக்கு வந்திருக்கிறார். சென்னை - திருத்தணி இடையிலான புறநகர் ரயிலில் சுராஜ் கடந்த சனிக்கிழமை பயணம் செய்து வந்தார். திருவாலங்காடு ரயில் நிலையில் 4 சிறுவர்கள் ரயிலில் ஏறியுள்ளார்கள். சுராஜ் பயணம் செய்த அதே பெட்டியில் தான் இவர்களும் ஏறியிருக்கிறார்கள்.
ரயிலில் ஏறிய சிறுவர்கள் போதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்ஸ்டகிராமில் ரீல்ஸ் வெளியிடுவதற்காகக் கத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ரயிலில் சுராஜ் மற்றும் சிறுவர்கள் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. ரயில் திருத்தணியைச் சென்றடையும் வரை வாக்குவாதம் நீடித்திருக்கிறது.
பிறகு, சிறுவர்கள் திருத்தணியில் பழைய ரயில்வே குடியிருப்புப் பகுதிக்கு சுராஜை அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. இதில் மூன்று சிறுவர்கள் புலம்பெயர் தொழிலாளியான சுராஜை சரமாரியாகத் தாக்கியுள்ளார்கள். நான்காவது சிறுவன் இத்தாக்குதல் சம்பவத்தை இன்ஸ்டகிராமில் வெளியிடுவதற்காகப் படம்பிடித்திருக்கிறார்கள்.
சுராஜைத் தாக்கிவிட்டு அச்சிறுவர்கள் தப்பியிருக்கிறார்கள். ரத்தக் காயத்தில் இருந்த சுராஜ், சிறிது நேரம் கழித்து தாமாகவே எழுந்து பிரதான சாலைக்குச் செல்ல, பிறகு தான் மற்றவர்களை இவரைக் கவனித்திருக்கிறார்கள். திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுராஜ் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது.
சுராஜை தாக்கிய காணொளியை சிறுவர்கள் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் புரசைவாக்கத்திலுள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி
கார்த்தி சிதம்பரம்
Tiruttani | Thiruttani | Migrant Labour | Migrant Worker | Juvenile | Observation Home | Edappadi Palaniswami | Karti Chidambaram |