மழைக்கால நிவாரணப் பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு: சென்னை மாநகராட்சி

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சொந்தமாக 36 படகுகளை வாங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.
மழைக்கால நிவாரணப் பணிகளில் ஈடுபட தன்னார்வலர்களுக்கு அழைப்பு: சென்னை மாநகராட்சி
1 min read

பருவமழை கால நிவாரணப் பணிகளில் ஈடுபட ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் கிழக்கு கடலோரப்பகுதி மாவட்டங்கள் வடகிழக்குப் பருவமழையால் பலனடையும். அதே நேரம் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழையால் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன்.

இதன்படி, https://gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற இணைய முகவரியைப் பயன்படுத்தி ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என்று அவர் அறிவித்துள்ளார்.

நிவாரணப் பணிகளில் ஈடுபட விண்ணப்பிக்கும் தன்னார்வலர்களுக்கு அவர்களின் துறை சார்ந்த பணிகள் வழங்கப்படும் எனவும், இது தொடர்பாக தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சியின் 16 மண்டலங்களின் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வழிகாட்டுவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சொந்தமாக 36 படகுகளை வாங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. இதில் முதற்கட்டமாக 2 படகுகள் மாதவரம் மற்றும் பெருங்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவசர கால தேவைக்காக மீனவர்களிடம் இருந்து 80 படகுகள் வாங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in