அமித் ஷாவின் தமிழகப் பிரசாரத்தில் சிறிய மாற்றம்

சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து காரைக்குடியில் சாலைப் பேரணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அமித் ஷாவின் தமிழகப் பிரசாரத்தில் சிறிய மாற்றம்
அமித் ஷாவின் தமிழகப் பிரசாரத்தில் சிறிய மாற்றம்ANI
1 min read

காரைக்குடியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடக்கவிருந்த வாகனப் பேரணியை அமித்ஷா ரத்து செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாக பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழ்நாடு வருகிறார்.

முதலில் காரைக்குடியில் சாலைப் பேரணி மேற்கொள்வதாகவும், இதைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார் அமித்ஷா.

சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து காரைக்குடியில் சாலைப் பேரணி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் அது ரத்து ஆனதால் அமித் ஷாவின் பிரசாரத்தில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 4-ல் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வருவதாக இருந்தது. அந்தப் பயணம் திடீரென ரத்தான நிலையில் இருநாள் பயணமாக நாளை தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in