ஜிஎஸ்டி வந்தபிறகு ஏற்பட்ட மாற்றங்கள்: வரி விகிதங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்

ஜிஎஸ்டி குறித்து நான் தனிநபராக எந்த முடிவும் எடுப்பதில்லை, மாநில நிதியமைச்சர்கள அனைவரும் அமர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

ஜிஎஸ்டி வரியால் ஏற்படும் நன்மைகள் குறித்தும்; ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் இன்று (மே 2) செய்தியாளர்களைச் சந்தித்தார் நிர்மலா சீதாராமன். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு நடுத்தர மக்கள் சிரமப்படுவது குறித்து அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது,

`ஊடகங்கள் என்பதால் உள்ளதை நான் சொல்கிறேன்; இதை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். ஜிஎஸ்டி குறித்து நான் தனிநபராக எந்த முடிவும் எடுப்பதில்லை, மாநில நிதியமைச்சர்கள அனைவரும் அமர்ந்து ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

ஜிஎஸ்டி பிரதமர் மோடியால் விதிக்கப்படும் வரி என்று கூறுவது தவறு. ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

இரண்டாவது, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 2017-க்கு முன்பு மதிப்புக் கூட்டல் வரி (வாட்), மாநில கலால் வரி போன்ற பல்வேறு வரிகள் மாநில அரசுகளால் விதிக்கப்பட்டன. 17 வரிகள் மற்றும் 8 முதல் 9 செஸ் வரிகள் ஆகியவற்றை இணைத்துதான் ஜிஎஸ்டி வரி உருவாக்கப்பட்டது.

எனவே ஜிஎஸ்டி வந்தபிறகுதான் நடுத்தர மக்கள் உபயோகிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் வாதம் தவறானது. ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பே வரிகள் இருந்தன. ஆனால் ஜிஎஸ்டி வந்தபிறகு, வரி விகிதங்கள் குறைந்துள்ளன.

வரி விகிதங்களை மேலும் குறைக்க நிதியமைச்சர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. முன்பு கடைகளில் வழங்கப்படும் ரசீதுகளில் வரி குறித்த தகவல் இடம்பெற்றிருக்காது. ஆனால் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தபிறகு மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி என்று ரசீதுகளில் தெளிவாக குறிப்பிடப்படுகிறது.

எனவே ஜிஎஸ்டி வந்தபிறகுதான் வரி கட்டுகிறோம் என்று நினைப்பது தவறு. முதலிலும் வரி இருந்தது; இப்போதும் உள்ளது. ஆனால் வெளிப்படையாக இப்போது ரசீதுகளில் குறிப்பிடப்படுகிறது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in