தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா

எங்களுக்கே தண்ணீர் இல்லை. போதிய மழை பெய்யவில்லை. மழை பெய்ய அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஆனால் நிலைமை அது போல இல்லை
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா
ANI
1 min read

தமிழகத்துக்கு வரும் ஜூலை 31 வரை நாளொன்றுக்கு 1 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை அடுத்து காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை குறித்து விவாதிக்க இன்று அவசர கூட்டத்தைக் கூட்டினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்தார். அப்போது, `காவிரி பாசன பகுதியில் 28 % தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை 14-ல் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்றார் சித்தராமையா.

`கபினி அணை நிரம்ப உள்ளது, எனவே அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஆனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் 53 % தண்ணீர் மட்டுமே உள்ளது. கர்நாடாகவில் 30 % நீர் பற்றாக்குறை நிலவுகிறது’ என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் கர்நாடகா நீர் பாசானத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார்.

முன்பு, `எங்களுக்கே தண்ணீர் இல்லை. போதிய மழை பெய்யவில்லை. மேலும் மழை பெய்ய அனைவரும் பிரார்த்தனை செய்வோம். ஆனால் நிலைமை அது போல இல்லை. நமது ஏரிகள், அணைகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை’ என்று காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை குறித்து கருத்து தெரிவித்திருந்தார் டி.கே.சிவக்குமார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in