விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு

திமுக, பாமக, நாம் தமிழர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ல் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி உள்பட நாடு முழுக்க காலியாக இருந்த 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் கடந்த மாதம் இடைத்தேர்தல் அறிவித்தது. விக்கிரவாண்டியில் ஜூலை 10-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் தீவிரமாகப் பிரசாரங்களை மேற்கொண்டன. திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கட்சியின் தலைவர் அன்புமணி, நாம் தமிழர் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார்கள்.

இதைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in