சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!

பொங்கல் திருவிழா தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்கவேண்டும்.
சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!
1 min read

பொங்கல் பண்டிகை அன்று (ஜனவரி 14) நடக்கவிருந்த சி.ஏ. என்று அழைக்கப்படும் பட்டயக் கணக்காளர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

வரும் 2025 ஜனவரியில் நடைபெறவுள்ள சி.ஏ. பவுண்டேஷன் தேர்வுகளின் அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம். இதன்படி, பொங்கல் பண்டிகை (14.01.2024) அன்று Business laws தேர்வும், உழவர் திருநாள் (16.01.2024) அன்று Quantitative Aptitude தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் அன்று நடைபெறும் சி.ஏ. தேர்வு தேதியை மாற்றும்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதிய மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், `பொங்கல் திருவிழா தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்கவேண்டும்’ என்றார்.

மேலும், தான் எழுதிய கடிதங்களை எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பகிர்ந்த சு. வெங்கடேசன், `பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. மத்திய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு’ என்று பதிவிட்டார்.

இந்நிலையில், ஜனவரி 14-ல் நடைபெறவிருந்த Business laws தேர்வு ஜனவரி 16-க்கும், ஜனவரி 16-ல் நடைபெறவிருந்த Quantitative Aptitude தேர்வு ஜனவரி 18-க்கும் மாற்றப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in