முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ். ராகவன் 97 வயதில் மறைவு
முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ். ராகவன் 97 வயதில் மறைவு

முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ். ராகவன் 97 வயதில் மறைவு

ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ள ராகவன், தமிழ் நாளிதழ்களிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Published on

மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் பி.எஸ். ராகவன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 97.

கடந்த 1952-ல் மேற்கு வங்கப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பி.எஸ். ராகவன், மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார்.

1987-ல் தன்னுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் அவர் சென்னையில் குடியேறினார். இதைத் தொடர்ந்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஆலோசகராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பணியாற்றினார்.

ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ள ராகவன், தமிழ் நாளிதழ்களிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழில் இவர் எழுதிய, ‘நேரு முதல் நேற்று வரை’ என்கிற நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது.

இவர் செய்த சேவைகளுக்காகப் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக மனிதநேய சேவைக்காக மெல்வின் ஜோன்ஸ் விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பி.எஸ். ராகவன் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.

logo
Kizhakku News
kizhakkunews.in