பிராட்வே பேருந்து நிலையம் தீவுத் திடலுக்கு மாற்றம்

தீவுத் திடலில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன.
சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

பிராட்வே பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு புதிய போக்குவரத்து முனையமாகக் கட்டமைக்கப்படவுள்ள நிலையில், இந்தப் பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத் திடலுக்கு மாற்றப்படவுள்ளது.

தீவுத் திடலில் தற்காலிக பேருந்து நிலையத்தை அமைப்பதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ. 5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன. மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வந்து செல்வதிலேயே பெரிய பேருந்து நிலையம் பிராட்வே. இந்தப் பேருந்து நிலையம் ரூ. 800 கோடிக்கும் மேலான செலவில் செய்து நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படவுள்ளது.

பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள 53 ஆண்டுகள் பழமையான குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு, ரூ. 100 கோடி செலவில் வாகன நிறுத்தம் வசதிகள் உள்பட நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in