பாஜகவின் கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பாஜகவின் ஊடக பலம், அதிகார துஷ்பிரயோகம், பண பலம் போன்றவற்றைத் தாண்டி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
பாஜகவின் கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

7 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:

கடந்த  நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த நாடாளுமன்றத் தொகுதியில் 40 க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.

400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. பாஜகவின் கனவு பலிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு கூட கருத்துகணிப்பு என்ற பெயரில் அவர்கள் உளவியல்ரீதியாக தாக்குதல் நடத்தினார்கள்

இது எங்கள் கூட்டணியின் வெற்றி. பாஜகவின் ஊடக பலம், அதிகார துஷ்பிரயோகம், பண பலம் போன்றவற்றைத் தாண்டி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.

நாளை நடைபெறும் இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு நான் செல்கிறேன்.

இண்டியா கூட்டணி சார்பில் நீங்கள் பிரதமர் பதவிக்கு முயற்சி செய்வீர்களாக என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, ‘தலைவர் கலைஞர் கூறியதை நான் இங்கு மீண்டும் சொல்கிறேன். என் உயரம் எனக்குத் தெரியும்’ என்றார் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in