பாஜக எங்களை மிரட்டியது: பிரேமலதா விஜயகாந்த்

"எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அம்மாவை போல் நானும் துணிச்சலாக முடிவெடுத்து அதிமுகவில் இணைந்தேன்” என்றார்.
பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்ANI

பாஜக தங்களை மிரட்டியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி மார்ச் 16 அன்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதில் அவர் பேசியதாவது:

“அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு பாஜக சார்பில் எங்களுக்கு நிறைய நிர்பந்தம் வைக்கப்பட்டது. எங்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்கினர். எங்களை பயமுறுத்தினார்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அம்மாவை போல் நானும் துணிச்சலாக முடிவெடுத்து அதிமுகவில் இணைந்தேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in