அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவர்கள்

பிரதமர் மோடி இந்தாண்டில் 6 முறை தமிழ்நாட்டுக்கு வந்து வாக்கு சேகரித்துள்ளார்.
அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவர்கள்
அடுத்தடுத்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பாஜக மூத்த தலைவர்கள்

தேர்தல் பரப்புரையை மேற்கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாகப் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக பரப்புரையை தீவிரப்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடி இந்த ஆண்டில் இதுவரை 6 முறை தமிழ்நாட்டுக்கு வந்து வாக்கு சேகரித்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 15 அன்று தமிழ்நாட்டுக்கு மீண்டும் வருகை தருகிறார் மோடி.

திருநெல்வேலி - அம்பாசமுத்திரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மோடி ஆதரவு திரட்டவுள்ளார்.

அதே போல, சமீபத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாமக்கல், திருவாரூர், விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருநாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார்.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மேட்டுப்பாளையத்தில் ஏப்.14 அன்று நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகனை ஆதரித்து சாலை பேரணி மேற்கொள்ள உள்ளார்.

மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக நாளை தமிழ்நாடு வருகிறார். அவர் சிதம்பரம், தஞ்சை, கோவை ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in