பொதுத்துறை வங்கிகளில் 4,455 பேருக்கு வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்கத் தயாரா?

முதல் நிலைத் தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் 4,455 பேருக்கு வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்கத் தயாரா?
பொதுத்துறை வங்கிகளில் 4,455 பேருக்கு வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்கத் தயாரா?
1 min read

பொதுத்துறை வங்கிகளில் வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வங்கி பணியாளர் தேர்வாணையமான ஐபிபிஎஸ் (ibps) வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள அரசு வங்கிகளுக்குத் தேவையான ஊழியர்களும் அதிகாரிகளும் வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS, Institute of Banking Personnel Selection) மூலமாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பொதுத்துறை வங்கிகளில் 4,455 துணை மேலாளர் பணிகள் (Probationary Officers/Management Trainees) உள்ளதாகவும், இப்பணிகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்படிப்பை முடித்த 20 - 30 வயது வரையிலானவர்கள் www.ibps.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதாவது ஆகஸ்ட் 2, 1994 முதல் ஆகஸ்ட் 1, 2004 வரை பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

முதல் நிலைத் தேர்வு அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அடுத்ததாக நவம்பரில் முதன்மைத் தேர்வை எழுதுவார்கள். அதன்பிறகு நேர்முகத் தேர்வு 2025 ஜனவரி, பிப்ரவரியில் நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Notification_CRP-PO-XIV_final-1.pdf

https://www.ibps.in/

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in