ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக மேலும் 15 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ல் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் திருவேங்கடம் என்பவர் ஜூலை 14-ல் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த 27 பேரில் பொன்னை பாலு, அருள், ராமு மற்றும் திருமலை உள்பட 10 பேர் மீது கடந்த 7 அன்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஹரிஹரன், மலர்கொடி, சதீஷ்குமார், ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி ஆகிய 15 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.