அதிமுக vs பாஜக: தொடரும் வார்த்தை யுத்தம்

தமிழகத்தில் இருக்கும் பல பேய்களை ஓட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது. ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
அதிமுக vs பாஜக: தொடரும் வார்த்தை யுத்தம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த ஜூலை 4-ல் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்துக் காட்டமாக விமர்சித்தார். அண்ணாமலை பேச்சின் சுருக்கம் பின்வருமாறு:

`அரசியலில் படிக்காமல் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பதற்கு ஜெயக்குமார் ஒரு உதாரணம். ஒரு வெள்ளை வேட்டி சட்டையைக் கட்டிக் கொண்டு அந்த நாமம் வாழ்க இந்த நாமம் வாழ்க என்று கூறிக்கொண்டு தமிழ்நாட்டில் பாதி பேர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் தான் அரசியலுக்குப் பீடை பிடித்திருக்கிறது.

1980, 90-களில் தலைவர்களுக்கு போட்ட ஓட்டைப் பெற்று அதிமுக என்ற கட்சி இங்கு உயிரோடு இருக்கிறது. இன்றைக்கு அந்தக் கட்சியின் அழிவுக்கு பல பேர் காரணம் என்றால் அதில் ஜெயக்குமார் முதல் காரணம். சொந்த ஊரில் அவரது பையன் டெபாசிட்டை இழந்துவிட்டார். அவரெல்லாம் மீடியா முன் வந்து பேசலாமா? காலையிலும், இரவிலும் லுங்கியைக் கட்டிக்கொண்டு அவர் பிரஸ் மீட் வைக்கிறார். இப்படிச் செய்தால் கட்சி விளங்குமா?’

அண்ணாமலையின் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்த ஜெயக்குமார், இன்று (ஜூலை 11) நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, `அவர் நான் லுங்கி கட்டிக் கொண்டு பேசுகிறேன் என்கிறார். நான் எப்போதும் வேட்டி கட்டிக்கொண்டுதான் பேசுகிறேன். லுங்கி என்பது அவமதிப்புக்குள்ளான உடையா? சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் லுங்கி கட்டுகிறார்கள். தமிழக இல்லங்களிலும் கூட லுங்கி கட்டுகிறார்கள். அண்ணாமலை என்கிற வேதாளம் எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மேல் ஏறிவிட்டது’ என்றார்.

இதைத் தொடர்ந்து ஜெயக்குமாருக்கு பதிலளித்த அண்ணாமலை, `தமிழகத்தில் இருக்கும் பல பேய்களை ஓட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது. ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இத்தனை பேய்கள் இருப்பதால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. எனவே இந்தப் பேயை முடித்துவிட்டு அந்தப் பேய்க்கு வருகிறேன் அதுவரை பொறுத்திருங்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in