பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை வரும் 29 முதல் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார்.
இதுதொடர்புடைய பட்டியலை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள்ளும் தங்களுடைய பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். பெரும்பாலான நட்சத்திர வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள். நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அண்ணாமலையும் உடனிருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை மேற்கொள்ளவுள்ள பிரசாரம் குறித்த தகவலை அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார்.
வரும் 29-ல் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தைத் தொடங்கும் அண்ணாமலை, ஏப்ரல் 12 அன்று நீலகிரியில் நிறைவு செய்கிறார்.